வகைப்படுத்தப்படாத

கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மக்களுக்கு இன்னல் ஏற்படாத வண்ணம் கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெகுவிரைவில் வங்காளவிரிகுடாவை உலகின் செல்வாக்கான பிராந்தியமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி மக்கள் மீது சுமையை ஏற்றாமல் கடன்சுமை தணிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

Related posts

பெண்களின் நகைகளை திட்டமிட்டு திருடிய கும்பல் கொத்தாக மாட்டியது : ஹட்டனில் சம்பவம்

‘love mother’ who adopted 118 children jailed for fraud

அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்