உள்நாடு

கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாளைய தினம் டீசல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவுடனான கடன் ஒப்பந்தத்திற்கு அமைய துரிதமாக நாட்டிற்கு எரிபொருள் வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதற்கிணங்க, பெப்ரவரி 27 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, மார்ச் மாதம் முடிவடைவதற்கு முன்னர் எரிபொருள் வழங்குமாறு எரிசக்தி அமைச்சு இந்தியாவிடம் கோரியுள்ளது.

இந்த எரிபொருளை 5 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சு உத்தேசித்துள்ள காலப்பகுதியில் இந்திய கடன் ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடன் ஒப்பந்தத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாளை (20) நாட்டை வந்தடையவுள்ளது.

Related posts

ஜனாஸா கட்டாய தகனத்தினை முடிவுக்கு கொண்டு வரவும்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது