வணிகம்

கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உலக பரவலின் காரணமாக இந்நாட்டு சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த, 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கால நிவாரணத் தொகையாகவும், 165 மில்லியன் டொலர்கள் கடனாகவும் இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

அந்த கடனுதவிக்கு மேலதிகமாக, வறுமை ஒழிப்புக்கான ஜப்பான் நிதியத்தின் கீழ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கும் இனக்கம் தெரிவித்துள்ளதாக இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திட நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஆசிய, பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பு நிறைவேற்றுக்குழுக்கூட்டம் பங்கொக்கில் ஆரம்பம்!

சீகிரியவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு