உள்நாடு

கடந்த 5 மாதங்களில் 800 முறைப்பாடுகள்

(UTV|கொழும்பு)- கடந்த 5 மாதங்களில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக 550 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் மின்கட்டணங்களில் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் தெரிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்று STF முகாம்கள் முடக்கம்

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது

தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட அனுமதி!