உள்நாடு

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி

(UTV | கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் அதிகளவு விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

14ஆம் திகதி விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15ஆம் திகதியான நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

Related posts

“நித்திரையில் பட்ஜட் உருவாக்கிய ரணில்” மரிக்கார் சாடல்

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா