உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 460 தொற்றாளர்கள் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 42,000 இனைக் கடந்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 460 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 42,056 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 418 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 35 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய 7 பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7,943 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் நாட்டில் கொவிட்-19 காரணமாக மேலும் ஒருவர் மரணமானார்

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே மரணமானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் மரணித்துள்ளார்.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீண்ட கால சிறுநீராக தொகுதி கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்

“இலங்கையை யாசகம் பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் தயாரில்லை” ஜனாதிபதி ரணில்

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் மீட்பு