உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 428 பேர் கைது

(UTV | கொழும்பு) –    நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 428 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் கண்டியில் 93 பேரும், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 77 பேரும், கம்பளை பகுதியைச் சேர்ந்த 58 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை மொத்தமாக 44,644 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் தொடர்பில் தொடர்ந்தும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

ஞாயிறு வரைக்கும் சமையல் எரிவாவு இல்லை

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்

குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி