உள்நாடு

கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 81,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் பயணித்த 2,244 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன், மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 272 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Related posts

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்