(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும், அடையாளம் காணப்படாத சுமார் 70 – 80 வயதுக்கிடைப்பட்ட மருதானை பொலிஸ் பிரிவில் இனங்காணப்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.