(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 674 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53,750 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, நேற்று(18) பதிவான கொரோனா 19 தொற்றாளர்கள் – 674 பேர்
பேலியகொட கொவிட் கொத்தணியிலிருந்து – 627 பேர்
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 47 பேர் (சைப்ரஸ் – 45 பேர் , ஐக்கிய அரபு இராச்சியம் – 2 பேர் )
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්