வகைப்படுத்தப்படாத

கடந்த 24 மணித்தியாலத்தில் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 4,873,123 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 338,572 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 35,410 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 385,885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 157,368 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்றைய தினம் 7416 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 31,183 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தேர்தலில் விருப்பமில்லை-தேர்தல் ஆணைகுழு

Boris Johnson’s Brexit policy ‘unacceptable’ – EU negotiator

மட்டகளப்பு-மன்னார் பிதேச சபைக்கான  உத்தியோகபூர்வ முடிவுகள்