உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

மைத்திரி மீதான தடை மேலும் நீடிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலுக்கு