உள்நாடுசூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை

(UTVNEWS | COLOMBO) –கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 190  கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவான நிலையில் இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 50 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

133  கொரோனா வைரஸ் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சுமார் 250 க்கும் அதிகமான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கையின் உண்மையான பொருளாதார நிலைமை குறித்த உலக வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வு

இன்றைய காலநிலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச இசை விருது விழா