உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 52,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்