வகைப்படுத்தப்படாத

கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – போரின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு, கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்.

எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் தடுமாற்றப்போக்கை காட்டி வருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

நீண்டகாலமாக இடம்பெற்ற போரின் காரணமாக பல பாதிப்புக்களை சந்தித்துள்ள மக்கள் தொடர்ந்தும் பாதிப்புகளையும் எதிநோக்கிவருகின்றனர்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக சீராக்குவதற்கு, பல்வேறு தரப்புகளுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் புரிதல் என்பவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன் போர் ஏற்பட்டதற்கான உண்மைகள் அறியப்பட்டு, கடந்தகால பிழைகளை சீர்ப்படுத்த வேண்டும்

எனினும் இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் தடுமாற்றப்போக்கை காட்டி வருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Premier summoned before PSC

உடனடியாக எந்தவித விலை அதிகரிப்புக்கும் அனுமதி வழங்கப்படாது-அமைச்சர் ரிஷாத்

வருகிறது புதிய அலைவரிசை