நாடளாவிய ரீதியில் கடந்த 2024 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 2,359 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 198 பஸ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 50 தனியார் பஸ்களும் 148 இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களும் ஆகும்.
அதன்படி,கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021 ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2,540 பேரும் 2023 ஆம் ஆண்டில் 2,321 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.