உள்நாடு

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

(UTV|கொழும்பு)- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தையை மாளிகாவத்தை பகுதியில் வைத்து அடையாளந்தெரியாத சிலர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குலில் காயமடைந்த கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களில் ஒருவர் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

ரஞ்சன் வைத்தியசாலையில் அனுமதி

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை