சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கும் பிணை

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் உள்ள கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் பிணையில் விடுவிக்க காலி பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சிபான இம்ரானை பார்வையிட அவரது உறவினர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியை சோதனைக்கு உட்படுத்திய போது 2 கையடக்க தொலைப்பேசிகளும் மற்றும் 2 சார்ஜர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கமைவாக கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களை ரத்கம பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று

சந்தன பிரசாத் உள்ளிட்ட 03 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது