கிசு கிசு

கஞ்சா உற்பத்தியுடன் விலை மாதுக்களையும் அங்கீகரிக்க அரசு முயற்சி?

(UTV | கொழும்பு) –  அரசாங்கம் கஞ்சா உற்பத்தியுடன், விலை மாதுக்களையும் அங்கீகரிக்க வேண்டும் என சபை உறுப்பினர்கள் கூறும் நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் செல்கிறது என தெரிவித்துக்கொண்டு, கஞ்சா உற்பத்தியை மேற்கொள்ளுமாறு சபையில் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில், அரசாங்கம் கஞ்சா உற்பத்தியை ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

நாட்டில் பணம் இல்லை என்பதற்காக நாட்டை விற்க வேண்டாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கஞ்சா உற்பத்தி நல்லது என கூறியவர்கள், இனி வரும் காலங்களில் விலை மாதுக்களையும் அங்கீகரியுங்கள் என தெரிவிப்பார்கள்.

ஆகவே, இந்தத் திட்டத்தை கைவிடுங்கள். விவசாயம் மற்றும் காடுகள் தொடர்பில் அக்கறை காட்டுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பேக்கரி பொருட்களின் விலை மேலும் உயர்வு?

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் போதைப்பொருள் வியாபாரிகள்