சூடான செய்திகள் 1

கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) தெற்கு கடற்படை வீரர்கள் மற்றும் பட்டியபொல பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகரிகளும் இணைந்து கனுகெட்டிய பிரதேசத்தில் நடத்திய சுற்றிவளைப்பில் ஹுங்கம பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 2.35 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றில் இந்த கஞ்சா தொகையை கொண்டு செல்லும் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுங்கம பிரதேசத்தைச் ​சேர்ந்த 56 மற்றும் 31 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி!

இன்று முதல் விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்