சூடான செய்திகள் 1

கஜ சூறாவளியின் தாக்கம்: மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்கவும்

(UTV|COLOMBO)-வங்காளவிரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜ சூறாவளி காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும். கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், கஜ சூறாவளியானது வங்காளவிரிகுடாவின் மத்தியில் தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, பலம் மிக்க சூறாவளியாக மாற்றமடையும். இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு திசையை நோக்கி நகர்வதுடன், பின்னர் தென் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். ஆகையால், மீனவர் சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

 

 

Related posts

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்!