(UTV | கொழும்பு) –
கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபானம் மற்றும் கசினோ நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதிக வரிகளை விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්