கேளிக்கை

கங்கனா ரனாவத், விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கை

(UTVNEWS|COLOMBO)- பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா வாழ்க்கை பட பெயர் தொடர்பில் இயக்குனர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இயக்குனர் விஜய், வித்யா பாலனை வைத்து இயக்குவதாக இருந்த ஜெயலலிதாவின் பயோபிக், தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வருகிறது.

`தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு `தலைவி’ எனவும், ஹிந்தியில் ’ஜெயா’ எனவும் பெயரிடப்பட்டது. இந்த பெயர்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தப் பெயர்கள் குறித்த தன்னுடைய கருத்தை, இயக்குநர் விஜய்யிடம் கங்கனா தெரிவித்துள்ளார்.

`ஒரு திரைப்படம் மூன்று மொழிகளில் எடுக்கப்படும்போது, அவை மூன்றுக்கும் ஒரே பெயர் வைப்பது தானே சரியாக இருக்கும். அதனால், இந்தி பதிப்புக்கு `தலைவி’ என்கிற பெயரையே வைக்கலாம்’ என கங்கனா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் படக்குழு ஆலோசனை செய்து வருவதாகவும், ‘தலைவி’ என்கிற பெயரில் ஹிந்தி பதிப்பு டைட்டில் லுக் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related posts

பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்

போதைக்கு அடிமையாகிய ரெஜினா

காதலில் வீழ்ந்த சுருதி