உள்நாடு

ஓய்வூதிய திணைக்கள உத்தியோகத்தர்கள் என கூறி நிதி மோசடி

(UTV | கொழும்பு) – ஓய்வூதிய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என கூறி 5 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த நான்கு சந்தேக நபர்களை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது நிலுவை ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகையை வழங்க உதவுவதாக கூறி இந்த மோசடியை செய்துள்ளனர்.

அத்தகைய நிலுவையைப் பெறுவதற்கு, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் மற்றும் அதற்கான கொடுப்பனவுகள் ரொக்கமாகவோ அல்லது தங்கமாகவோ செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மேலும் இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்

பரிதவித்த மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தவே முல்லைத்தீவில் கால் பதித்தோம் -ரிஷாட்

ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரில் போலி செய்தி

editor