விளையாட்டு

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே

பிரித்தானியாவின் டென்னீஸ் வீரர் அண்டி மரே இந்த வருடத்துடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடன் தாம் ஓய்வு பெறுவது குறித்து சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில வேளைகளில அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரே தமது இறுதி தொடராக இருக்கலாம் என்று கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய பகிரங்க தொடரில் கலந்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள மரே, மெல்பேர்னில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, தாம் விம்பில்டன் தொடருடனேயே ஓய்வுப் பெற எத்தனித்திருக்கின்ற போதும், அதுசாத்தியப்படுமா என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

உலகக்கிண்ண போட்டியை பார்வையிட இரசிகர்களுக்கு அனுமதி

நியூசிலாந்து தோற்றது வருத்ததை ஏற்படுத்தியுள்ளது: ஸ்டோக்ஸின் தந்தை (வெளியானது உண்மை)

ஒலிம்பிக் 2021 இரத்தாக அதிக வாய்ப்பு