உள்நாடு

ஓமான் விவகாரத்தில் குஷான் மற்றும் இரு பெண்கள் கைது: 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இரத்து

(UTV | கொழும்பு) –   ஓமான் விவகாரத்தில் குஷான் மற்றும் இரு பெண்கள் கைது: 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இரத்து

ஓமானில் இலங்கை பெண்களை பல்வேறு செயற்பாடுகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று , ஓமானின் தலைநகர் மஸ்கட் இல் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஓமனுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் கைது செய்யப்பட்டு 06 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாக ஓமானுக்கு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருபெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் கொழும்பை சேர்ந்த தரகர் ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக வேலை தேடுபவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!

நாளை 12 மணித்தியால நீர் விநியோகம் தடை