கேளிக்கை

ஓமனில் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா…

தமிழ் திரைப்பட உலகில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி, இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ராவுக்கும், அவரை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் காதல் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தி நடிகர்கள், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பல படங்களிலும், ஹாலிவுட் டி.வி. தொடர்களிலும் நடிக்க உள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோடீஸ்வரர்களும், பிரபலங்களும் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் விலை உயர்ந்த பங்களாவை வாங்கி இருக்கிறார். அங்கு கணவருடன் பிரியங்கா சோப்ரா குடியேறுகிறார். பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியர், தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபடி உள்ளனர்.
தற்போது அவர்கள் ஓமனில் தேனிலவை கொண்டாடி வருகின்றனர். அங்குள்ள சொகுசு விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் ஓமனில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

Related posts

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?

நயன்தாரா படத்துக்கு யுவன் இசையமைக்கமாட்டாரா?

அமிதாப் – அபிஷேக் பச்சனுக்கு கொரோனா