விளையாட்டு

ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்

(UTV | கொழும்பு) – யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக, நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் அறிவித்துள்ளார். 34 வயதாகும் நடால், கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணைகளே தன் விலகலுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

தன் விலகல் முடிவு குறித்து ட்விட்டர் மூலம் தெரிவித்த நடால், “கொவிட்-19 வைரஸ் தொற்று குறித்தான பாதிப்புகள் உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்னும் அது கட்டுக்குள் வரவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த முறை யுஎஸ் ஒப்பன் தொடரில் நான் பங்கேற்கப் போவதில்லை.

இப்படிப்பட்ட முடிவை நான் எடுக்க விரும்பவில்லைதான். ஆனால், இந்த முறை என் மனதை பின் தொடர்ந்து இம்முடிவை எடுத்துள்ளேன்” என உறுதிபட தெரிவித்துள்ளார்.

எதிர்வரும், 31ம் திகதி ஆரம்பிக்கும் யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டி, செப்டம்பர் 13ம் திகதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டி ஆரம்பமாகும்.

“4 மாதங்களாக எந்த வித டென்னிஸ் போட்டிகளும் நடக்கவில்லை. அப்படியான சூழலில் தீடிரென இப்படி அட்டவணைகள் போடுவது காட்டுமிராண்டித்தனமாது” என்று டென்னிஸ் நிர்வாகங்களை சாடியுள்ளார் நடால்.

Related posts

இலங்கையுடனான போட்டியில் கோஹ்லிக்கு ஓய்வு

யுபுனுக்கு தீர்மானமான நாள் இன்று

மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் : அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு