அரசியல்உள்நாடு

ஓட்டமாவடியை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் மு.கா சார்பாக போட்டியிடும் மீராவோடை மேற்கு வேட்பாளர் ஜ.எம்.றிஸ்வினை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று (17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.

அவர் இதன்போது அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் சிந்தித்து வாக்களித்து ஒன்பது வட்டாரங்களையும் வெற்றி பெற வைத்து, சபையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருங்கள்.

எதிர்வரும் நான்காண்டுகளுக்கு, சகல அதிகாரங்களையும் கொண்டு நாங்கள் உங்கள் பிரதேசத்தைக் கட்யெழுப்புவோம்.

அதற்கான முழுமையான சந்தர்ப்பதையும் எமக்குத்தாருங்கள் என அவரது உரையில் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் முதலாம் வட்டார வேட்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஓட்டமாவடி பிரதேச மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் – சபாநாயகர்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது – சஜித் பிரேமதாச

editor

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம் – சஜித்

editor