உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் விபத்து – தாயும், மகனும் காயம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (05) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர்.

பஸ் வண்டியில் பயணித்த இருவரும் பஸ் வண்டியில் இருந்து இறங்கி வீதியைக் கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்

கல்வி சீர்திருத்த செயல்முறையின் மூலம், தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு முன்னுரிமை !

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்