உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதேசத்தில் இன்று (05) சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது.

ஓட்டமாவடி – மீராவோடை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இந்த இளைஞன் மாத்தளை நோக்கி பயணிப்பதற்காக தியாவட்டவான் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் நிரப்பும் போதே குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

இன்றும் மழையுடனான காலநிலை

83 எம்பிக்களின் பதவிகள் பறிபோகும் நிலை?