உள்நாடு

ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடமிருந்து 13.5 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 15 000 தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. அத்தோடு ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில் எஞ்சிய தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் 6 மாதங்கள் மாத்திரமேயாகும். எனவே அதற்கேற்பவே தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும். எனவே ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் வழங்கப்படக் கூடியவாறு திட்டமிட்டு அடுத்தகட்ட தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படும்.

தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காக எவ்வித நிதி பற்றாக்குறையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம். வெளிநாடுகளிலிருந்து இவற்றைப் பெற்றுக் கொள்வதில் சில நடைமுறை சிக்கல்கள் காணப்படுகிறதே தவிர நிதி பிரச்சினை இல்லை. ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முழுமையான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related posts

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

காபந்து அரசாங்கத்தை நியமிக்குமாறு SLFP ஜனாதிபதிக்கு கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்