உள்நாடுசூடான செய்திகள் 1

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது

(UTV | கொழும்பு) – ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவு கூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும்.

தேரர் அவர்களின் வருகை இலங்கைத் தீவில் சமயம், கலாசாரம், சமூக மற்றும் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் பண்பாட்டு ரீதியான மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர் மஹிந்த தேரருக்கும் அப்போதைய அரசராக இருந்த தேவநம்பியதிஸ்ஸ மன்னருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். எமது சமூக பெறுமானங்கள், பொருளாதாரம், இலக்கியம், கலைகள் மட்டுமன்றி கைவினை முறைமைகள் கூட புதிய பரிமாணத்தை பெற்றது..” எனவும் அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு