அரசியல்உள்நாடு

ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பிரியந்த குமாரவின் சடலத்துடனான விமானம் இன்று மாலை இலங்கைக்கு

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

மீள ஆரம்பிக்கப்படும் கொக்குதொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள்!