விளையாட்டு

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji

(UTV |  டோக்கியோ) – ஜப்பானிய பனிச்சறுக்கு (skateboarding) வீராங்கனை நிஷியா மோமிஜி (Nishiya Momiji) ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார்.

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி தனதாக்கிக் கொண்டுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மற்றொரு 13 வயது வீராங்கனையான ரைசா லீலுடன் இடம்பெற்ற பலத்த போட்டியின் பின்னர் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இப்போட்டியில் 13 வயதான நிஷியா மோமிஜி 15.26 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்,

இரண்டாவது இடத்தை பெற்ற ரைசா லீல் 14.64 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் அதனை 16 வயதான நகயாமா ஃபூனா என்ற வீராங்கனை பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் அவர் 14.49 புள்ளிகளைப் பெற்றார்.

Related posts

கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்

முதல் வெற்றி கொழும்பு கிங்ஸ் அணிக்கு

இலங்கை அணியில் இடம்பெறவுள்ள மாற்றம்