விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை

(UTV | டோக்கியோ) –   ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு, எதிர்வரும் ஜூலை 23ம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் திகதி வரை நடக்க உள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில் வெளிநாட்டு ரசிகர்களை ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்க வாய்ப்பே இல்லை, இது பற்றி இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்திய அணி

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று