சூடான செய்திகள் 1

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதம் பிடிக்கின்றார்-சபாநாயகர்

(UTV|COLOMBO)-இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதத்துடன் செயற்படுகிறார் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற் குறிப்பிடவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஒலிபரப்பு செய்யுமாறு பல முறைகள் ​தெரிவித்தும் அதனை ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

பரீட்சைகளுக்கு தடங்கல் இல்லாத வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்-அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ