உள்நாடு

ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம்(13) மேலும் 194 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 80 பேர் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய 114 பேரும் எவ்வித தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் கம்பஹா பகுதியை சேர்ந்த 36 பேர், மினுவங்கொட பகுதியை சேர்ந்த 38 பேர், திவுலபிட்டியவை சேர்ந்த 34 பேர் மற்றும் சீதுவ பகுதியை சேர்ந்த ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேர் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் 7 பேர் மற்றும் கிரிந்திவெலயில் 4 பேர் என நாட்டின் மேலும் பல பகுதிகளில் இருந்து இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,038 ஆக அதிகரித்தது.

 

Related posts

ராஜகிரிய உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு