கிசு கிசு

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..!

(UTV|IRAQ) ஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவில் இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.

கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related posts

தாஜுடீனின் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் வாய்திறந்தார்

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

‘பீப்’ சவுண்டில் மோதிக்கொள்ளும் பொன்சேகா – சமல்