வகைப்படுத்தப்படாத

ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், இறந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளின் இந்த மர்ம மரணத்துக்கான வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

 

Related posts

දිවයිනට බලපෑ සුළගේ අඩුවීමක්

රක්ෂිත බන්ධනාගරගතව සිටි වෛද්‍ය ශාෆි ෂියාබ්දීන් ඇප මත මුදාහැරේ

Two drug traffickers held by Navy in Hambantota