உள்நாடுசூடான செய்திகள் 1

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று

(UTV |கொழும்பு) – நாட்டில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதேபோல், இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

பசிலுக்கு எதிரான வழக்கு மார்ச் 28 ஆம் திகதி முதல் ஒத்திவைப்பு