உலகம்

ஒரே நாளில் 4,529 பேரை காவு கொண்ட கொரோனா

(UTV |  இந்தியா) – இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரே நாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது.

இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான முதல் நாளாகும்.

இந்நிலையில், ஒரே நாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 3 இலட்சத்தையும் விட குறைவாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330 ஆகும்.

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா (5,433,506), கர்நாடகா (2,272,374), கேரளா (2,200,706), உத்தரபிரதேசம் (1,637,663), தமிழ்நாடு (1,664,350), மற்றும் டெல்லி (1,398,391) ஆகியன இந்தியாவில் மொத்த தொற்றாளர்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களாகும்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2,19,86,363 பேர் குணமடைந்துள்ளார்கள்.

Related posts

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 3,917,653 பேர் பாதிப்பு

‘உயிரைக் கொடுத்தாவது நெருக்கடியினை தீர்ப்பேன்’

கனடா பொலிஸார் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தல்