உலகம்

ஒரே நாளில் 1500 பேர் பலி

(UTV|கொழும்பு)- உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது

மேலும், அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 1,528 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 560, 402 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 22, 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் இதுவரை 1,853,155 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 114, 247 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா பாதிப்பில் இருந்து 423,625 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவிற்கு வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழப்பு

‘உயிரைக் கொடுத்தாவது நெருக்கடியினை தீர்ப்பேன்’