உள்நாடு

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 3,518 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபடியான பி.சி.ஆர்.பரிசோதனைகள் இதுவாகும்.

இதற்கமைய இதுவரை நாட்டில் மொத்தமாக 195,025 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, நேற்றைய தினம்(18) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூடானில் இருந்து வந்த நபரொருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்குமே இவவாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

editor

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்