உள்நாடு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ : நீட்டித்த அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலத்தை நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஜனாதிபதி செயலணியின் செல்லுபடியாகும் காலம் நேற்றுடன் நிறைவடையவிருந்தது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த செயலணியின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து ஜனாதிபதி செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதும் நிபுணர்கள் சபையின் கருத்துகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயலணியின் பணிகளை பொருத்தமான செயற்பாட்டுத் திட்டமொன்றினுள் வினைத்திறனாக மேற்கொண்டு முடிவுறுத்துவதற்காகச் அதன் காலத்தை நீட்டிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா சம்பவம்: பரீட்சை மேற்பார்வையாளருக்கு நடந்த சம்பவம்

வறுமைக் கோட்டை துல்லியமாக கண்டறிய வேண்டும் – சஜித் பிரேமதாச.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் : பிரதமருடன் விசேட பேச்சுவார்த்தை