அரசியல்உள்நாடு

ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை ஆதரிப்பது சட்டவிரோதமானது – தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றுமொரு வேட்பாளரை ஆதரித்து கருத்து வௌியிடுவது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் தனது சொந்த வெற்றிக்காக மட்டுமே ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், மற்றவருக்கு பிரசாரம் செய்யும் வேட்பாளர் மற்றும் ஆதரவு வழங்கப்படும் வேட்பாளர் மீதும் தேர்தல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இயற்கையோடு இணைந்த விவசாயப் புரட்சி அவசியம்

ஜனாதிபதி தேர்தல் – நாளை முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்

editor

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.