உள்நாடு

ஒரு வாரத்திற்கான எரிபொருள் கையிருப்பில் உள்ளது

(UTV | கொழும்பு) – தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை தொடர்ந்து எரிபொருளை விநியோகித்து வருகின்றதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக செயலாளருமான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;

“.. அடுத்த வாரத்திற்கான சாதாரண உபயோகத்திற்கு போதுமான எரிபொருள் தற்போது நம் கையிருப்பில் உள்ளது. எனவே, மக்கள் தரப்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்.

அத்துடன் 35,300 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் ஏற்கனவே துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் டீசல் கப்பலொன்று நாளை வரவுள்ளது.

இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

நமது நாடு மிகப்பெரிய அந்நிய செலாவணி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

I O C எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியதன் பின்னரே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Ceypetco, எரிபொருளை பெரும் நஷ்டத்தில் விற்கிறது ஆனால் Ceypetco இன்னும் எரிபொருள் விலையை அதிகரிக்க முடிவு செய்யவில்லை..”

Related posts

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறப்பு

ரணிலின் 2024 பட்ஜெட் வாக்களிப்பில் முஸ்லிம் MPகளின் நிலைப்பாடு!