உள்நாடு

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 665 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்!

கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 665 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்ந்தும் இந்தியாவிலிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 31 ஆயிரத்து 225 பேரும், மாலைத்தீவிலிருந்து 7 ஆயிரத்து 984 பேரும், ஜேர்மனியில் இருந்து 7 ஆயிரத்து 374 பேரும், பிரித்தானியாவில் இருந்து 7 ஆயிரத்து 848 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். 

Related posts

உலக பசி சுட்டெண்ணில் இலங்கைக்கு 64வது இடம்

கிழக்கில் அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்