உள்நாடு

ஒரு நாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு, நிகழ்நிலை முறைமையிலும், மின்னஞ்சல் ஊடாவும் மாத்திரம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

தேவையான சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அதிகளவான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் ஒருநாள் சேவை ஊடாக சான்றிதழ் வழங்கும் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

அத்துடன் ‘ ‘Exams Sri Lanka’ என்ற உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியைச் செயற்படுத்துவதன்மூலம், சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் உடன்பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் – மனோ கணேசன்

editor

ஷானி’க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

editor