கித்துல்மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் கித்துல் பானி மற்றும் கித்துல் கருப்பட்டி உட்பட ஏனைய கித்துல் உற்பத்தி பொருட்களை இறைவனுக்கு பூஜை செய்யும் நிகழ்வு நேற்றையதினம் (09) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்தினபுரி மகா சமன் தேவாலயத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கித்துல் உற்பத்தி தொழில்துறையை மேலும வளர்ச்சியடைய் செய்வதற்கு அரசுக்கு அதிக தேவை உள்ளது. இதுபோன்ற பாரம்பரிய கலாசாரத்தினை எதிகால சந்ததியினர் மத்தியில் கொண்டு சென்று அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் எமது விவசாயிகளின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த முடியும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இரத்தினபுரி, கேகாலை, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கம்பா ஆகிய மாவட்டங்களில் கித்துல் மரங்கள் கூடுதலாக உள்ளன.
மேற்படி 11 மாவட்டங்களில் 30 இலட்சம் கித்துல் மரங்கள் உள்ளன. இதன்மூலம் கித்துல் பானி, கித்துல் கருப்பட்டி, கித்துல் மாவு உட்பட பல உணவு பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பௌத்த விவகாரங்களுக்கான உதவி ஆணையாளர் டபிள்யூ. என்.பி.என்.வீரகோன், இலங்கை கித்துல் அமைப்பின் பணிப்பாளர் பியந்தகுமார உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி